இலங்கை செய்திகள்

தமிழ் அரசியல்வாதிகள் ஜெனிவா நோக்கிப் பயணம்

12 Mar 2018

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக தமிழ் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் ஜெனிவா நோக்கி பய­ணித்து வரு­கின்­றனர். வட மாகா­ண­ச­பையின் உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் ஏற்­க­னவே ஜெனிவா சென்­றுள்ளார். 

தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் இன்று திங்­கட் ­கிழமை ஜெனி­வாவை சென்­ற­டை­ய­வுள்ளார். கொழும்­பி­லி­ருந்து நேற்று புறப்­பட்ட அவர் லண்டன் சென்று அங்­கி­ருந்து ஜெனிவா செல்­கின்றார். 

இதே­போன்று வட­மா­காண அமைச்சர் ஆனந்தி சசி­த­ரனும் நேற்று அங்கு பய­ண­மா­கி­யுள்ளார். இவர்­களைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மாகாண சபை உறுப்­பி­னர்­களும் ஜெனி­வா­வுக்கு செல்­ல­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அவர்கள் அங்கு நடை­பெறும் உப குழுக் கூட்­டங்­களில் பங்­கேற்­ப­துடன் ஜெனி­வா­வி­லுள்ள இரா­ஜா­தந்­தி­ரி­க­ளையும் அரச சார்­பற்ற பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்­ள­துடன் ஆணைக்­குழு அமர்வில் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் உரையாற்றவும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV