உலகம் செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கம் – ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

26 Jul 2017

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதற்கான சான்றுகளை ஐரோப்பிய ஒன்றியம் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் நிதியை தொடர்ந்து முடக்கி வைக்கும் உத்தரவையும் ரத்துச் செய்தும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் 2006ஆம் ஆண்டு தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருந்தது.

அதேவேளை, இந்தப் பட்டியலில் இருந்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் பெயரை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV