இலங்கை செய்திகள்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் விசேட கலந்துரையாடல்

11 Feb 2019

தமிழர் விடுதலைக் கூட்டணியின் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் இன்று இடம்பெற்றது.

 

குறித்த கலந்துரையாடல் இன்று ஆனைக்கோட்டை, உயரப்புலம் பாரதி சனசமுக நிலைய மண்டபத்தில், பிரதேச சபை உறுப்பினர் அ.கேதுசன் தலைமையில் நடைபெற்றது. 

 

  தமிழர் விடுதலைக் கூட்டணியின் இலண்டன் கிளையின் இணைப்பாளர் திரு.ச.அரவிந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாக செயலாளர் இரா.சங்கையா,  இளைஞர் அணி செயலாளர் திரு. ந.மதிஅழகராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும்  குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் தொடர்பில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் சனசமுக நிலைய செயலாளர் திரு.  பகீரதன் பெண்களின் தேவைகளை எடுத்துரைத்ததுடன், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் குறிப்பிட்டார். தொடர்ந்து பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கு எவ்வாறான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுப்பது என்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்ிபடதக்கதாகும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்