சினிமா செய்திகள்

தமிழக அரசுக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள்

17 Jul 2017

விருதுகள் அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2009 - 2014ம் ஆண்டுகள் வரைக்கான தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் சேரன் இயக்கத்தில் வெளியான 'பொக்கிஷம்' படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளது.

தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பைத் தொடர்ந்து, அரசுக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''தமிழக அரசுக்கு ஒருவேண்டுகோள் விருது பெற்ற கலைஞர்கள் திரைப்படம் எடுக்க அரசு வங்கிகளில் கடன் கொடுக்க வேண்டும். சிறந்த கலைஞர்களுக்கு இதுவே பேருதவி.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு, வீடு இலவசம் என்றெல்லாம் திட்டங்கள் உள்ளன.அவர்களைப் போல கலைஞர்களும் மண்ணிற்கு பெருமை சேர்ப்பவர்களே. தொழில் வளர நல்ல படைப்புகள் தொடர்ந்து உருவாக கலைஞர்கள் எந்நாளும் தொழில் செய்ய இந்தத் திட்டம் அறிவித்தால் விருது கிடைத்த மகிழ்வை விட அதிகம் மகிழ்வோம்'' என்று சேரன் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV