25 May 2023
தங்கம் கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு, கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடைக்கு ஏற்ப, அண்மைக் காலத்தில் விதிக்கப்பட்ட அபராதங்களிலேயே அதிகூடிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவரை விடுவிப்பதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும், இதேபோன்ற குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள எவரும் அபராதம் செலுத்தினால் சுங்கச் சட்டத்தின் படி 24 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.