கனடா செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் ஜஸ்ரின் ட்ரூடோவை கட்டியணைத்து வரவேற்றார்

12 Oct 2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலநியா ட்ரம்ப் இருவரும் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி Sophie Gregoire Trudeau இருவரையும் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் அன்புடன் வரவேற்றனர்.

வெள்ளை மாளிகையின் வெளியே கமராக்கள் பளபளக்க ட்ரம்பும் ட்ரூடோவும் கைகளை குலுக்கி கட்டியணைத்தனர். பிரதம மந்திரியும்Gregoire Trudeau வும் முதல் பெண்மணிக்கு கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

NAFTA பேச்சு வார்த்தைகள் குறித்த பதற்றமான நிலைக்கு மத்தியில் ட்ரூடோவின் வாசிங்டன் விஜயம் அமைந்துள்ளது. NAFTA பேச்சுவார்த்தை தோல்வியுறின் ஒரு இலவச வர்த்தக ஒப்பந்தம் குறித்து நேரடியாக கனடாவுடன் பேச்சு வார்த்தை நடாத்த தயாராக உள்ளதாக புதன்கிழமை ட்ரம் தெரிவித்துள்ளார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV