உலகம் செய்திகள்

டெஸ்லா நிறுவன தலைவராக பெண் அதிகாரி நியமனம்

08 Nov 2018

பிரபல எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் (Tesla) தலைவராக ராபின் டென்ஹாம் (Robyn Denholm) என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டெஸ்லா நிறுவனம், எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. இந்நிறுவனத்தில் தலைவராக இருந்த எலன் மஸ்க், அமெரிக்க பங்குச்சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தியதானபுகாரில், பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான டெல்ஸ்ட்ராவின், தலைமை நிதி அதிகாரியாக இருக்கும், ராபின் டென்ஹாம் (Robyn Denholm) என்ற பெண் அதிகாரி, டெஸ்லா தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

டெல்ஸ்ட்ராவிலிருந்து(Telstra) விலகி வர, 6 மாத அறிவிப்பு காலம் இருப்பதால், அதன்பின், டெஸ்லாவில் பதவியேற்று, முழு நேர தலைவராக பதவி வகிப்பார் என்றும், பெண் அதிகாரியை தலைவராக ஏற்பதில் மகிழ்ச்சி கொள்வதாகவும், டெஸ்லா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்