இந்தியா செய்திகள்

டெல்லியில் 3 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் ஓட்டல் அறை

16 Jul 2017

காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் தொடர்புடைய ஓட்டல் அறை 3 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் ஓட்டல் நிர்வாகம் முறையிட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் தொடர்புடைய ஓட்டல் அறை 3 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் ஓட்டல் நிர்வாகம் முறையிட்டுள்ளது.

தெற்கு டெல்லி, சாணக்கிய புரியில் லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இதையடுத்து அந்த அறை மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப் பட்டது. இந்த அறையை சீசனுக்கு தகுந்தபடி நாள் ஒன்றுக்கு 55 ஆயிரம் முதல் 61 ஆயிரம் வரை ஓட்டல் நிர்வாகம் வசூலித்து வந்துள்ளது. இந்த அறை மூடப்பட்டுள்ளதால் தங்களுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, டெல்லி பெரு நகர நீதிமன்றத்தில் ஓட்டல் நிர்வா கம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீஸ் தரப்பில், “இந்த அறையை தடயவியல் நிபுணர்கள் 2 முறை ஆராய்ந்த போதிலும், 5 வெவ்வேறு மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டபோதும், சுனந்தா புஷ்கர் எப்படி கொல்லப்பட்டார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அந்த அறையை ஆராய மேலும் கால அவகாசம் வேண்டும்” என்று கூறப்பட்டது.

இதையடுத்து ஆய்வுக்கு இன்னும் எவ்வளவு காலம் அந்த அறை தேவை என்பதை, தடயவியல் நிபுணர்களுடன் ஆலோசித்து அறிக்கை அளிக்குமாறு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV