இலங்கை செய்திகள்

டெனீஸ்வரன் விவகாரம் 16ம் திகதி சபை சிறப்பு அமர்வில் ஆராயப்படவுள்ளது

11 Jul 2018

வடக்கு மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராகவிருந்த டெனீஸ்வரன், சட்டப்படி வடக்கு மாகாண அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்கிறார் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் மாகாண சபைச் சிறப்பு அமர்வை, எதிர்வரும் திங்கட்கிழமை 16ம் திகதி நடத்தவுள்ளதாக, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார். 

வடமாகாண சபையின் அமர்வு  கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்ற போது அவர் மேற்கண்டவாறு அறிவித்தல் விடுத்தார். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்