இந்தியா செய்திகள்

டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு!

12 Oct 2017

டெங்கு பாதிப்பு குறித்து மத்தியக் குழு நாளை தமிழகத்தில் ஆய்வு செய்ய உள்ளது எனத் தகவல் வந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் ஐந்து மருத்துவர்கள் கொண்ட மத்திய வல்லுநர் குழு நாளை டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. டெங்குக் காய்ச்சலின் வீச்சை கட்டுப்படுத்த அறிவுறுத்தல்களை இந்தக் குழு தமிழக அரசுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காய்ச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டெங்குக் காய்ச்சலின் தாக்கம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே, அதைக் கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கவும் இன்றிரவு மத்தியக் குழு தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழு நாளை டெங்கு பாதிப்பு குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV