இலங்கை செய்திகள்

டி.ஐ.ஜி. லத்தீப் ஓய்வு பெறுவதை முன்னிட்டே டுபாயில் கொண்டாட்டம் நடத்தப்பட்டதாம்

11 Feb 2019

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் ஓய்வு பெறுவதனைக் கொண்டாடும் வகையிலேயே போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் உட்பட அவரது சகாக்கள் டுபாய் நட்சத்திர ஹோட்டலில் கொண்டாட்டம் நடாத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதூஷின் இரண்டாவது மனைவியின் பிள்ளையின் பிறந்த நாள் கொண்டாட்டமே அன்று நடாத்தப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிருந்தன. இருப்பினும், டி.ஐ.ஜி. எம்.ஆர்.லத்தீப்பினால் ஏற்படவிருந்த ஆபத்துக்கள் முடிவடைந்துள்ளது என்பதை சந்தோஷமாக  கொண்டாடும் வகையிலேயே இந்தக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்