இந்தியா செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி.குரூப்-4 தேர்வு முறைகேடு

24 Jan 2020

குரூப் - 4 முறைகேடு புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத  டி.என்.பி.எஸ்.சி. தடை விதித்து உள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு பதில் தகுதியான நபர்களை தேர்வு செய்து புதிய பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், குரூப் - 4 முறைகேடு புகாரில் தேர்வு மைய அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேரிடம் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. முறைகேடு தொடர்பாக காலையில் இருந்து 12 பேரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான மூன்று பேரில் ஒருவர் இடைத்தரகர் என தெரியவந்துள்ளது. 99 பேரும் முறைகேடாக தேர்வு எழுதியது தொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.  

ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 99 பேர் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்