சினிமா செய்திகள்

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஓடிடி ரிலீஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

23 Jun 2022

மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தொடர்ந்து அவெஞ்சர்ஸ், ஸ்பைடர் மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இந்த திரைப்படங்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. மார்வெல் திரைப்படங்களில் அடுத்த படமாக 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டி வெர்ஸ் ஆப் மேட்னஸ்' திரைப்படம் மே 6-ஆம் தேதி உலக அளவில் வெளியானது. இந்த படத்தில் பெனெடிக்ட் கும்பர்பேட்ச், எலிசபெத் ஓல்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்பைடர் மேன் 1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சேம் ரைமி இயக்கவுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகிவுள்ளது. இந்த வெளியீட்டினால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam