கனடா செய்திகள்

டவுன்ரவுன் மத்திய பகுதியில் கத்திக் குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

09 Jun 2019

ரொரன்ரோ டவுன்ரவுன் மத்திய பகுதியில் இன்று காலை வேளையில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 12.15 அளவில் Yonge Street மற்றும் Charles Street பகுதியில் குறித்த அந்த நபர் கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்டதனை உறுதிப்படுத்தியுள்ள காவல்துறையினர், உயிராபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், எனினும் சிறிது நேரத்தின் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், கத்திக் குத்து தாக்குதல் Yonge street மற்றும் Dundas street பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், சம்பவ இடத்தில் ஆதாரங்களைச் சேகரித்துவரும் அதிகாரிகள், அந்த இடத்தில் காணப்படும் கண்காணிப்பு ஒளிப்பதிவுகளையும் பரிசோதித்து வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்