கனடா செய்திகள்

டவுன்ரவுன் இரவு விடுதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார்

10 Feb 2019

டவுன்ரவுன் இரவு விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் பிரம்ப்டன் பகுதியை சேர்ந்த, ஜானோய் கிரிஸ்டியன் என்ற 24 வயதுடையவர்  என ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நாடாளுமன்ற வீதிக்கு அருகில் குயின் ஸ்ட்ரீட் ஈ பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த குறித்த நபர், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்த்க்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்