இலங்கை செய்திகள்

ஜே.வி.பி இற்கு 10 மில்லியன் ரூபாயைச் செலுத்துமாறு வணிக நீதிமன்றம் உத்தரவு

11 Jan 2019

ஜே.வி.பி இற்கு 10 மில்லியன் ரூபாயைச் செலுத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு வணிக நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது.

விமல் வீரவன்சவினால் எழுதப்பட்டு, அண்மையில் வெளியிடப்பட்டிருந்த “நெத்த வெனுவட்ட அத்த” எனும் நூலினூடாக, ஜே.வி.பியின் அறிவுசார் சொத்து சூறையாடப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் டில்வின் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றிலேயே, மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன், குறித்த நூலை விநியோகப்பதற்கும் நீதிமன்றத்தால் தடையுத்தரவு ​பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்