விளையாட்டு செய்திகள்

ஜோகோவிச் சாம்பியன்

14 May 2019

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 6–3, 6–4 என, கிரீஸ் வீரர் டிசிட்சிபாசை தோற்கடித்தார்.

ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ் மோதினர். முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றிய ஜோகோவிச், 2வது செட்டை 6–4 என தன்வசப்படுத்தினார்.

முடிவில் ஜோகோவிச் 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதற்கு முன், 2011, 2016ல் கோப்பை வென்றிருந்தார். இது, இவரது 33வது மாஸ்டர்ஸ் பட்டம். இதன்மூலம் மாஸ்டர்ஸ் அந்தஸ்து பெற்ற தொடரில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ஸ்பெயினின் நடாலுடன் (33 முறை) பகிர்ந்து கொண்டார். மூன்றாவது இடத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (28 முறை) உள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்