இந்தியா செய்திகள்

ஜெகன்மோகன் ரெட்டி பாத யாத்திரைக்கு போலீசார் அனுமதி

04 Nov 2017

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களிலும் பாதயாத்திரை சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க உள்ளார்.  வருகிற 6-ந்தேதி கடப்பா மாவட்டம் இருபலா பாயா என்ற இடத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்க உள்ளார். சுமார் 3,000 கி.மீ தூரம் வரை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில்  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நடத்தும் பாதயாத்திரைக்கு அம்மாநில போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

இந்த பாதயாத்திரையின் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி பொது சொத்து மற்றும் தனியார் சொத்துக்கு குந்தகம் விளைவிக்காமல் செய்யும் படி அறிவுறுத்தியுள்ளதாக, மேலும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பான தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு  அம்மாநில டிஜிபி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திரபாபுநாயுடு ஆட்சியின் அவலங்களை எடுத்துக்கூறவே இந்த பாத யாத்திரை நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV