சினிமா செய்திகள்

ஜூன் மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு!

16 May 2019

கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் இந்தியன். தற்போது இந்தப் படத்தின் 2ம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பித்த வேகத்திலேயே சில நாட்களில் நிறுத்தப்பட்டது. இதனால், படக்குழுவினரிடையே பிரச்சினை, தயாரிப்பு நிறுவனத்தில் பணமில்லை, அரசியல் பின்னணி என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. இதனால், லைகா நிறுவனம் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்தது. இதன் காரணமாக, ஷங்கர், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்தக் கதையைக் கூறி அதற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக புத்தகத்தையும் வழங்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் நாடியுள்ளார்.

இதில், அதிர்ச்சியுற்ற லைகா நிறுவனம், மீண்டும் இந்தியன் 2 படத்தில் மும்முரமாக இறங்கியுள்ளது. இதையடுத்து, வரும் ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்க இருப்பதால், இடையிடையே இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்