சினிமா செய்திகள்

ஜூன் மாதத்தை குறிவைக்கும் ரஜினி

16 Apr 2018

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். அதுபோல், சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. இந்த 2 படங்களில் முதலில் வரப்போகும் படம் எது என்ற குழப்பம் நீடித்து வந்தது.

கடைசியாக ஏப்ரல் 27ம் தேதி ‘காலா’ ரிலீஸ் என்று தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து பட ரிலீஸ் வேலை நடந்து வருகிறது. பட டீசரும் வெளியாகி சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில், டிஜிட்டல் பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் செய்வதை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் படப்பிடிப்பு, பட விழாக்கள், புரமோஷன் நிகழ்ச்சிகள் கூட நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மார்ச் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் முடங்கியிருக்கிறது. இம்மாதம் வரை இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்திருப்பதால் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ‘காலா’ திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் நடத்தி வரும் ஸ்டிரைக்குக்கு விரைவில் தீர்வு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த மாதம் வெளியாக காத்திருந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் காலா தள்ளிபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், ஜூன் மாதம் ‘காலா’ என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்