இலங்கை செய்திகள்

ஜி.எல். பீரிஸ் இன்று பதிலளிப்பார்

14 Sep 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று மாலை ஆரம்பமான நிலையில், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்சிலட் நேற்று  முன்வைத்த விடயங்கள் விசேட கவனத்தை ஈர்த்தது.

இலங்கையின் நல்லிணக்க முன்னேற்றம் தொடர்பில் கவலை வெளியிட்ட அவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் 16  முன்னாள் உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டதை  பாராட்டினார். ஜனாதிபதி சிவில் செயற்பாடு செயற்பாட்டாளர்களைச் சந்தித்ததையும் அவர் பாராட்டியுள்ளார்.

சாதாரண விவாதம் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நாளை நிறைவு பெறும். அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இலங்கை தொடர்பான விடயங்களுக்கு இன்று பதில் அளிக்க உள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam