கனடா செய்திகள்

ஜிம் வில்ஸனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதை ஒன்ராறியோ முதல்வர் உறுதிப்படுத்தினார்

08 Nov 2018

அமைச்சு பதவியை இராஜினாமா செய்த ஜிம் வில்ஸனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் உறுதி செய்துள்ளார்.

அவரது அரசாங்கத்தில் நடந்த சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் நீண்ட நாட்கள் மௌனமாக இருந்த அவர் நேற்று புதன்கிழமை இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்ட முதல்வர், போதைப்பொருளில் இருந்து விடுபடும் சிகிச்சை காரணங்களுக்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததாக கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று கிழக்கு ஒன்ராறியோ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய டக் ஃபோர்ட், ஜிம் வில்ஸன் அலுவலகம் குறித்த விடயம் தொடர்பில் உறுதிப்படுத்த ஆரம்பத்தில் மறுத்துவிட்டதென கூறினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்