இலங்கை செய்திகள்

ஜயந்த கெட்டகொட மீண்டும் நாடாளுமன்றத்திற்கு

13 Sep 2021

அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதை அடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.

2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக கொழுப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியதுடன் பின்னர் அந்தப் நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் 2001 இல் மீண்டும் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

அதனை அடுத்து 2011 ஆம் ஆண்டில் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததுடன், 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.

இதனை அடுத்து கடந்த மாதம்  பஷில் ராஜபக்ஷ தேசியப் பட்டியில் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கு வழி வகுக்கும் வகையில் பதவி விலகினார் என்பது  குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam