இலங்கை செய்திகள்

ஜமாத்தே மில்லதே இப்ராஹிம் அமைப்பினை சேர்ந்த 11 பேர் TID இடம் ஒப்படைப்பு

11 Sep 2019

இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள ஜமாத்தே மில்லதே இப்ராஹிம் அமைப்பினை சேர்ந்த 11 பேர், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, அம்பாறை பொலிஸாரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் கடந்த 90  நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்