இலங்கை செய்திகள்

ஜனாதிபதி அவரது சொத்தைப் பங்கிடுவது போல் அரசாங்கத்தை நடத்தி வருகிறார் -சரத் பொன்சேகா

06 Dec 2018

நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சட்டம் பொதுவானது என தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறை செல்லக்கூட நேரிடும் என கூறியுள்ளார்.

நேற்று நாடாளுமன்ற அமர்வு இடம்பெற முன்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரி அவரது சொந்த சொத்தை பங்கிடுவது போல்தான் அரசாங்கத்தை செயற்படுத்தி வருகிறார். நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. எனவே, அவர் சிறை செல்லக்கூட நேரிடும்.

காலையில் கூறும் கருத்தை இரவிலேயே மாற்றி விடுகிறார். இரவில் கூறியதை காலையில் மறந்து விடுகிறார். இந்தப் பிரச்சினையைத் தோற்றுவித்தவரே, இன்னும் சில நாட்களில் பிரச்சினைத் தீர்ந்துவிடும் எனக் கூறுகிறார். இவையெல்லாம் மிகவும் வேடிக்கையானது. வ்வாறான ஒருவரை பொது வேட்பாளராக கொண்டுவந்து கட்சியும் நாடும் அழிந்துவிட்டது. இது ஒரு சிறந்த பாடமாகும்” என கூறினார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்