இலங்கை செய்திகள்

ஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் விமல் வீரவன்சவின் மனைவியிடம் விசாரணை

10 Oct 2018

ஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியை சி.ஐ.டியினர் விசாரணைக்குட்படுத்தவுள்ளனர்

ஜனாதிபதி கொலை சதி முயற்சியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் சசி வீரவன்சவை சந்தித்துள்ளமை சி.ஐ.டியினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன

கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியர் தான் விமல் வீரவன்சவின் வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார்

விமல்வீரவன்சவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்தே தான் அவரது வீட்டிற்கு சென்றதாகவும் அவ்வேளை  விமல்வீரவன்சவின் மனைவியை சந்தித்து பேசியதாகவும் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு ஆபத்து உள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV