இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்றப் பிரேரணைக்கு ஆதரவில்லை - கூட்டமைப்பு

06 Dec 2018

ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்றப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ஒரே தீர்வு ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை கொண்டு வருவது மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்ற பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்