உலகம் செய்திகள்

சோமாலியா உணவு விடுதியில் தற்கொலைப்படை தாக்குதல்

15 Jun 2017

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மோகடிசு நகரில் உள்ள பிரபலமான இரண்டு உணவு விடுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் பலியாகினர்.  இந்த தாக்குதல் பற்றி அதிகாரிகள் கூறியதாவது: புதன் கிழமை இரவு 8 மணியளவில் மோகடிசு நகரில் உள்ள உணவு விடுதி மற்றும் கிளப் ஒன்றிற்குள் வெடிகுண்டு நிரப்பிய கார் ஒன்றை பயங்கரவாதி எடுத்து வந்தான்.

காரை வெடிக்கச்செய்த பயங்கரவாதி அங்கிருந்து அருகில் இருந்த பிசா உணவு விடுதிக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 18 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்தப்பட்ட இரு இடங்களும் புலம் பெயர்ந்த மக்களும், வசதி படைத்த மக்களும் அதிகம் பயன்படுத்தும் இடங்களாகும். தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்த தாக்குதலுக்கு  சோமாலியாவை சேர்ந்த அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. சோமாலியாவில் புதிய அரசு பதவியேற்று, புதிய ராணுவ அமைப்புகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்