உலகம் செய்திகள்

சோமாலியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 167 ராணுவ வீரர்கள் பலி

19 Sep 2023

சோமாலியாவில் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். இவர்களை ஒடுக்குவதற்காக சோமாலியா அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் அண்டை நாடான எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளின் ராணுவமும் சோமாலியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக உள்ளன.

அந்தவகையில் சோமாலியாவின் மேற்கு பகுதிகளில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எத்தியோப்பிய ராணுவ வீரர்கள் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் எத்தியாவின் 167 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam