இந்தியா செய்திகள்

செம்மரக்கடத்தலில் தமிழக இளம்பெண் கைது

13 Mar 2018

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவை அடுத்த ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடியில் வனத்துறையினர் தீவிர வாகனச் சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனைச் செய்தனர். அதில் 25 செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் 4 பேர் வந்தனர்.

விசாரணையில் காஞ்சீபுரம் மாவட்டம் பாலுசெட்டிச்சத்திரம் திருப்பங்குழி கிராமம் அண்ணாநகர் முதல் தெருவைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மனைவி ரபீகா (வயது 25) என்ற இளம்பெண்ணும், அதேபகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் (27), சிறுகாவேரிப்பாக்கம் கிராமம் திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் (30), காவங்கரை தெருவைச் சேர்ந்த பூபாலன் (36), விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் வெல்லுமலை சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (55) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஜீப்புடன், செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்மரக்கடத்தல் வழக்கில் ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்