இந்தியா செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கக் கட்டி பறிமுதல்

13 Oct 2021


துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் 12 -ம் தேதி நேற்று சென்னை வந்த ஒரு ஆண் பயணி, தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், விமான நிலைய சுங்கத் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அவரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.


இந்த சோதனையின் போது அந்த நபர், மொத்தம் 1170 கிராம் தங்கம் கடத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஒரு தங்கக்கட்டி மட்டும் சுமார் 1 கிலோ எடை கொண்டதாகவும், ரூ.51.36 லட்சம் மதிப்புடையது என்றும் சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த பயணி கைது செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam