இலங்கை செய்திகள்

செஞ்சோலை மாணவிகள் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது

14 Aug 2019

செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள்  நடைபெற்றன. இதன்போது உயிரிழந்த மாணவிகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்