சினிமா செய்திகள்

சூர்யாவின் அடுத்த படத்தில் யார் யார்?

13 Mar 2018

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கி இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் செந்தில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது, செல்வராகவன் இயக்கும் ‘NGK’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்கள். சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த் அல்லது ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா என இரண்டு பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில், அடுத்த படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.வி.ஆனந்தே விட்டரில் இதை அறிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, கலை இயக்குனராக கிரண் பணியாற்றுகிறார். இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஏற்கெனவே, சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் ‘அயன், மாற்றான்’ ஆகிய 2 படங்கள் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்