இந்தியா செய்திகள்

சூனியக்காரர்கள் என சந்தேகம் குடும்பத்தினர் மீது தாக்குதல்

31 Jul 2017

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் கோபரலண்டி கிராமத்தில் ஒரு சிறுமிக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனை அடுத்து 70 வயது முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சூனியக்காரர்கள் என கிராமத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

முதியவருக்கு ரூ.4 லட்சமும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் கிராமத்தினர் அபராதம் விதித்துள்ளனர்.

தங்களால் இதனை செலுத்த இயலாது என அவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களை மனித கழிவுகளை வற்புறுத்தி உண்ண வைத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு டயோரியா ஏற்பட்டு சொராடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

கிராமத்தினரின் தாக்குதலை தொடர்ந்து அந்த குடும்பத்தின் 7 பேரும் வீட்டை விட்டு தப்பியோடி படகாடா நகரில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

யாரும் இல்லாத நிலையில் அவர்கள் வீடு கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் ஒருவரான பாபுலா நாயக் கடந்த சனிக்கிழமை கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அவரை கிராமத்தினர் அடித்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து 5 பெண்கள் உள்பட கிராமத்தினர் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களும் கைது செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்தனர்.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV