இலங்கை செய்திகள்

சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய காவல்துறை அதிகாரி கைது

15 Jul 2017

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமாரின்  தப்பித்தல் முயற்சிக்கு  உதவிய குற்றசாட்டின் கீழ் , முன்னாள் வடமாகாண பிரதி காவல்துறை குற்றதடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி   கைது செய்ப்பட்டுள்ளார்.

வடமாகாண முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபரும் தற்போதைய மத்திய மாகாண பிரதி காவல்துறை மா அதிபருமான லலித் ஏ ஜெயசிங்கவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதி காவல்துறை மா அதிபர் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்