இலங்கை செய்திகள்

சுவாமி விபுலாநந்தரின் 125 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆவணப்பட வெளியீடு

17 Jul 2017

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் 125 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சுவாமி விபுலாநந்தரின்  ஆவணப்பட வெளியீடு மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் எதிர்வரும் 20 ஆம் திகதி மாலை வெளியிடப்படவுள்ளது.

இவ் ஆவணப் படம், சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவர் பாபு வசந்தகுமாரின் தயாரிப்பிலும் ராகுலன் சீவகனின் இயக்கத்திலும், பூபாலரெட்ணம் சீவகனின் மேற்பார்வையிலும் நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் பாபு வசந்தகுமாரினால், கடந்த வருடம் மாமாங்கேஸ்வரர் திருவிழாவில் மாமாங்கம் ஆலயத்தின் புகழ்பாடும் இறுவட்டு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்