இந்தியா செய்திகள்

சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

03 Nov 2017

இமாச்சலபிரதேசம் மண்டி மாவட்டம் கோட்லி நகரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர், மாணவர்கள், ஊழியர்கள் என 106 பேர் 2 பேருந்துகளில் கல்வி சுற்றுலா சென்றனர். இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் ஆக்ராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில்  சென்றுகொண்டிருக்கும் போது திடீரென  பேருந்தின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் பலியானார். மேலும் 45 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

 மற்றொரு பேருந்து பாதுகாப்பாக ஓட்டலை சென்று அடைந்தது.  இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் ஆக்ரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வி சுற்றுலா சென்ற பேருந்து விபத்திற்குள்ளானது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பேருந்து டயர் வெடித்தால் வேகமான சென்ற பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV