இந்தியா செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு

14 Aug 2019

நாட்டின் 73-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்ற உள்ள டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து பதற்ற சூழல் நிலவுவதால் இம்முறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


 குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  காஷ்மீரிலும் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப்பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

 மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குள் என மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரிலும் சுதந்திர தினம் கோலகலமாக கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்