இலங்கை செய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட மாநகர சபை உறுப்பினர் போதைப்பொருள் வியாபாரி - சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர்

11 Jul 2018

சுட்டுக்கொல்லப்பட்ட மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா, போதைப்பொருள் வியாபாரி என்று சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், “நாட்டில் இடம்பெற்று வரும் அநேகமான குற்றச்செயல்களுக்குப் பின்னணிக் காரணியாக குடும்பப் பிரச்சினையே அமைந்துள்ளது. எனவே, தனிப்பட்ட குடும்ப விவகாரங்களில் பொலிஸார் தலையீடு செய்வது கடினமானதாகும்.

அண்மையில் பாடகியொருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவ்வாறான ஒன்றுதான். அதனைத் தொடர்ந்து கொழும்பு - ஜம்பட்டா வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரு அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர்.

 குறித்த இடத்திலேயே இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த கொழும்பு மாநகரசபை உறுப்பினர் போதைப்பொருள் வியாபாரியாவார். அவருக்கு எதிராக கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் இரண்டு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டார்.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV