இலங்கை செய்திகள்

சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்ட 5 வாகனங்கள்

24 Jun 2022

சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து சொகுசு வாகனங்களை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

கைப்பற்றப்பட்ட வாகனங்களில் பிஎம்டபிள்யூ, மெர்சிடெஸ் மற்றும் ஆடி கார்கள் உள்ளடங்குவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து உதிரிப் பாகங்கள் என்ற போர்வையில் இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருகொடவத்தையில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இருந்து இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சுங்க அதிகாரிகள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

அவற்றுள், 40,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள 2500  விஸ்கி போத்தல்கள், என்ஜின் ஒயில், அழகு சாதனப் பொருட்கள், மஞ்சள் மற்றும் லைட்டர்கள் ஆகியவை அடங்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வத்தளை சரக்கு அகற்றும் நிலையத்தில் இரண்டு கொள்கலன்களில் இருந்து இந்த பொருட்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam