இலங்கை செய்திகள்

சுகாதார அமைச்சு டெங்கு ஒழிப்பு நேரம் பிரகடனம்

25 May 2023

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய,  வெள்ளிக்கிழமைகளின் காலை வேளையை டெங்கு ஒழிப்பு நேரமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் அரச, தனியார் நிறுவனங்களிலும் பாடசாலைகள், வீடுகள் அனைத்திலும் சுற்றாடலை சுத்தப்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஊடாக அனைத்து நிறுவனங்களையும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam