உலகம் செய்திகள்

சீன நிறுவனங்களை முடக்கும் அமெரிக்கா!

16 May 2019

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை உருவாக்கும் நிறுவனங்களின் கருவிகளை பயன்படுத்த தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் கையெழுத்திடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச பொருளாதார அவசர சட்ட அதிகாரத்தின் படி இந்த உத்தரவை டிரம்ப் பிறப்பிப்பார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் இந்த உத்தரவில் எந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனம் என்பது குறிப்பிடப்படாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் சீனாவின் ஹூவாய் செல்போன் நிறுவனத்தை குறிவைத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹூவாய் நிறுவன செல்போன்களை உளவு பார்க்கும் கருவிகளாக சீனா பயன்படுத்துவதாக அமெரிக்கா ஏற்கனவே புகார் கூறி உள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா எடுக்க உள்ள நடவடிக்கைக்கு சீன வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்