உலகம் செய்திகள்

சீனாவில் 19 பேரை கொன்ற கொலையாளிக்கு மரண தண்டனை

29 Jul 2017

சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில் யாங் கிங்பெய் என்பவர், அங்குள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கும், இவரது தந்தைக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.

அதாவது, குடும்ப கடன்களை அடைப்பதற்கு மேலும் கடன் வாங்குமாறு இவர் தந்தையை கூறி உள்ளார். அதற்கு தந்தை திட்டியுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த அவர் தந்தையையும், தாயையும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்தார்.

இந்த சம்பவத்தை மூடி மறைப்பதற்காக அவர் அண்டை வீடுகளில் வசித்து வந்த 6 குடும்பங்களை சேர்ந்த 17 பேரை துடிக்கத்துடிக்க கொலை செய்தார்.

சீனாவில் இப்படிப்பட்ட கொலைகள் மிகவும் அபூர்வமானவை என்பதால், அங்கு இவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

சம்பவங்கள் நடந்த மறுநாளில் அந்த மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கில் வைத்து, யாங் கிங்பெய் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது தன்மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். தான் செய்த கொடூர குற்றங்களுக்காக மனம் வருந்தினார். ஆனாலும் அவர் செய்தது கருணை காட்டி குறைந்த தண்டனை வழங்குவதற்கான குற்றங்கள் அல்ல என்று கோர்ட்டு முடிவு செய்தது.

இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் கோர்ட்டு அறிவித்தது.

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV