உலகம் செய்திகள்

சீனாவின் தென் பகுதியில் கடும் மழையினால் 5 பேர் உயிரிழப்பு

11 Jun 2019

சீனாவின் மத்திய, தென் பகுதிகளில் கடும் மழையால் குறைந்தது ஐந்து பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தது நான்கு நாட்களுக்கு கடும் மழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

ஜியாங்சு (Jiangxi) மாநிலத்தில் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவிலான விளைச்சலும் நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்திருப்பதாகச் சீன நாளேடு அதிகாரபூர்வத் தகவல் வெளியிட்டது.

மொத்தம் 1.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 382 மில்லியன் டாலருக்குப் பொருளாதாரச் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தென்மேற்குப் பகுதியில் சுமார் 20,000 வீடுகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. சாலை, பாலங்கள் போன்ற கட்டமைப்புகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்