உலகம் செய்திகள்

சீனாவின் கட்டிடக்கலையை பாதுகாக்க நடிகர் ஜாக்கிசான் நடவடிக்கை

16 May 2018

உலக அளவில் புகழ்பெற்ற நடிகரான ஜாக்கிசான், நான்கு பழங்கால வீடுகளை வாங்கி அதனை மறுசீரமைக்கும் விழாவில் கலந்துகொண்டார். சீனாவின் கட்டிட கலையை பாதுகாக்கவும், அதன் பெருமையை பறைசாற்றும் வகையில், பண்டைய வீடுகளை வாங்கி அதை பழமை மாறாமல் மறுசீரமைப்பதில் ஆர்வம் கொண்டவர் ஜாக்கிசான்.

இதற்காக தற்போது பழைய வீடுகளை வாங்கியுள்ள நிலையில், அந்தவீடுகள் கிழக்கு ச்சீனாவின் Anhui மாகாணத்தின் Bengbu மியூசியத்தில் மறுநிர்ணயம் செய்யப்படவுள்ளன. மேலும், பண்டைய வீடுகளிலிருந்து பெறப்பட்ட பொருட்களின் மூலம், வடிவமைக்கப்பட்ட பொருட் கண்காட்சியிலும் கலந்துகொண்ட ஜாக்கிசான், பிளாஸ்டிக் பாட்டில்களால் வடிவமைக்கப்பட்ட சிங்கம், பாழடைந்த சைக்கிள்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட dragon , போன்றவற்றையும் பார்வையிட்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்