இலங்கை செய்திகள்

சீனாவால் வழங்கப்பட்ட டீசல் விவசாயிகளுக்கு விநியோகம்

24 Jan 2023

விவசாயிகளுக்காக  சீனாவால் இலவசமாக வழங்கப்பட்ட டீசலை விநியோகிப்பதற்கு 12.2 கோடி ரூபாய் வரை அரசாங்கத்திற்கு செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெல் அறுவடைக்காக சீனாவினால் வழங்கப்பட்ட 6.8 மில்லியன் லீற்றர் டீசலை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் பணியை விவசாய அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

டீசலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விநியோகித்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்காக அரசாங்கத்திற்கு 12.2 கோடி ரூபாய் செலவாகும் என்றார்.

அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை விவசாயம் செய்யும் நெல் விவசாயிகளுக்கு டீசல் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டரை ஏக்கர் அல்லது ஒரு1 ஹெக்டேயரில் விவசாயம் செய்யும் விவசாயிக்கு 15 லீற்றர் எரிபொருள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் ஊடாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தேவையான பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவிடம் விவசாய அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam