இலங்கை செய்திகள்

சில மாவட்டங்களில் இன்று காலை ஊரடங்கு சட்டம் நீக்கம்

26 Mar 2020

கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் 2 மணிக்கு அமலாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று மதியம் 2 மணிக்கு அமலாக்கப்படும் எனவும் அது மீண்டும் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினமே மதியம் 2 மணிக்கு மீண்டும் அமலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறே கொள்வனவு செய்ய முடியும் எனவும் தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்