இலங்கை செய்திகள்

சிறைச்சாலைகளில் 1299 மரண தண்டனைக் கைதிகள்

10 Jan 2019

சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிவரை நிரந்தரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ள கைதிகள் என 1299 பேர் இருக்கின்றனர் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 1215 ஆண்களும் 84 பெண்களும் அடங்குகின்றனர். மேலும் மரணதண்டனை விதிக்கப்பட்ட 1299 கைதிகளில் 784 ஆண் கைதிகளும் 34 பெண் கைதிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்திருக்கின்றனர்.

அதன் பிரகாரம் நிரந்தரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 476 கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர். அவர்களில் ஆண் கைதிகள் 426 பேரும் பெண் கைதிகள் 50பேரும்  அடங்குவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்