இலங்கை செய்திகள்

சிறைக் கைதிகளுக்கு தொழில் பயிற்சி

14 Feb 2020

சிறைக் கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்கும், அவர்களின் தண்டனை முடிந்ததும் அவர்களுக்கு உள்ளுர் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கும்  திட்டமிடப்பட்டுள்ளது.

அவன்கார்ட் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் இது  திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக நிசங்க சேனாதிபதி குறிப்பிடுகையில், கைதிகளுக்கு முறையான பொறிமுறையின் கீழ் பயிற்சி அளிப்பது சமூகத்தை பாதுகாப்பானதாக மாற்றும் எனத் தெரிவித்தார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்