இலங்கை செய்திகள்

சிறுபான்மை அரசியல் கட்சிகள் பிரதமர் ரணிலை அவசரமாக சந்திக்கின்றன

17 Feb 2017

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்கும் இடையே அவசர சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்லை மீள்நிர்ணய அறிக்கையை இன்று வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையிலேயே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் இன்று நாடு திரும்பவுள்ள நிலையில், அவர் நாட்டை வந்தடைந்தவுடன் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடத்தில் கையளிக்கப்பட்ட நிலையில் உடனடியாக வர்த்தமானி பிரசுரத்தை வெளியிட்டு புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை கடுமையாக கண்டிப்பதாக சிறு மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் அறிவித்திருந்தன.

அத்துடன், அமைச்சர் பைசர் முஸ்தபா, சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்கு அநீதி இழைக்கும் ஜனநாயக விரோதமான செயற்பாட்டை கைவிடவேண்டும் எனவும் தமது பரிந்துரைகளை கவனத்திற் கொண்டு உள்ளீர்க்கப்பட்ட இறுதி அறிக்கையையே வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தன.

இதனையடுத்து அமைச்சர் பைசர் முஸ்தபா, குறித்த விடயத்தை கருத்திற் கொள்வதாகவும் சிறுபான்மை அரசியல் கட்சிகளை பாதிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டது என்றும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்